வாள்நுதல் இம் மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள், விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர், உம்மைக்
காண நீர் இரக்கம்இலீரே.
ஒளிநிறைந்த நெற்றியைக்கொண்ட இளம்பெண் இவள், உங்களைக் காண வேண்டும் என்ற ஆசையில் தனக்குள் நைந்துபோகிறாள்.
வலிமைமிகுந்த வாணாசுரனின் ஆயிரம் தோள்களைத் துண்டித்தவரே, உங்களை இவள் காணும்படி அருள்செய்யமாட்டீர்களா? உங்களுக்கு இரக்கமில்லையா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.