இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 5

அழகிய துளசிமாலை அணிந்தவரே
Updated on
1 min read

இவள் இராப்பகல் வாய்வெரீஇத் தன
குவளை ஒண்கண்ண நீர்கொண்டாள், வண்டு
திவளும் தண்அம்துழாய் கொடீர், என
தவளவண்ணர் தகவுகளே.

இந்தப்பெண் உங்களையே எண்ணி இரவும் பகலும் புலம்புகிறாள், இவளது குவளைப்பூ போன்ற அழகிய கண்களில் நீர் நிரம்பிவிட்டது.

வண்டுகள் சென்று படியும் குளிர்ந்த, அழகிய துளசிமாலை அணிந்தவரே, அந்த மாலையை இவளுக்குத் தரமாட்டீர்களா? தூய இறைவனான நீங்கள் பக்தர்களைக் காக்கும் தன்மை இதுதானா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com