இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 10

வளமான வாழ்வும் செல்வமும்
Updated on
1 min read

ஏழை, பேதை, இராப்பகல் தன
கேழ்இல் ஒண்கண்ண நீர்கொண்டாள், கிளர்
வாழ்வை வேவ இலங்கைசெற்றீர், இவள்
மாழைநோக்கு ஒன்றும் வாட்டேன்மினே.

இந்த அறியாப்பெண், பேதைப்பெண், இரவுபகலாக வருந்துகிறாள், இவளுடைய ஒப்பற்ற, ஒளிவீசும் கண்களில் நீர் வடிகிறது,

அரக்கர்களின் வளமான வாழ்வும் செல்வமும் அழியும்படி இலங்கையை வென்றவரே, இவளுடைய இளமையான பார்வையை வாட்டாதீர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com