இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 4

அப்பொழுது மலர்ந்த தாமரையை
Updated on
1 min read

எப்பொருளும் தானாய் மரகதக்குன்றம் ஒக்கும்,
அப்பொழுதைத் தாமரைப்பூ கண், பாதம், கை கமலம்,
எப்பொழுதும் நாள், திங்கள், ஆண்டு, ஊழிஊழிதொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே.

எப்பொருளும் தானாகவே திகழும் எம்பெருமான், மரகதக்குன்று போன்றவன், அவனது திருக்கண்கள், அப்பொழுது மலர்ந்த தாமரையைப் போன்றவை, திருவடிகளும் திருக்கைகளும் தாமரை போன்றவை, எந்த நேரமும், எந்த நாளும், எந்த மாதமும், எந்த வருடமும், ஊழிஊழியாக எப்போதும் அவனை நான் கொண்டாடுவேன், அந்தந்தக் கணத்தில் கிடைக்கிற (புதிய), திகட்டாத அமுதமாகத் திகழ்வான் அவன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com