இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 11

குடக்கூத்து ஆடிய அந்தப் பெருமானின்
Updated on
1 min read

கூறுதல் ஒன்று ஆராக் குடக்கூத்த அம்மானைக்
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே.

மிகுந்த சிறப்புகளை உடையவன் எம்பெருமான், அவனுடைய குணங்களில் ஒன்றே ஒன்றைக்கூட மனிதர்களால் சொற்களைக் கொண்டு விவரிக்க இயலாது.

குடக்கூத்து ஆடிய அந்தப் பெருமானின் புகழைச் சொல்ல விரும்பினார் குருகூர்ச் சடகோபர். அவ்வாறு அவர் சொன்ன அந்தாதிப் பாடல்கள் ஆயிரம். அவற்றில் இந்தப் பத்தையும் சொல்ல வல்லவர்கள் வைகுந்தத்தைச் சென்றடைவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com