தீர்ந்த அடியவர்தம்மைத்
திருத்திப் பணிகொள்ளவல்ல
ஆர்ந்த புகழ் அச்சுதனை,
அமரர்பிரானை, எம்மானை,
வாய்ந்த வளவயல்சூழ் தண்
வளம் குருகூர்ச் சடகோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப்பத்தும்
அரு வினை நீறு செய்யுமே.
அனைத்தையும் விட்ட அடியவர்களுடைய தடைகளைப் போக்கித் தனக்கு அடிமையாக்கிக்கொள்ளவல்ல அச்சுதன், நிறைந்த புகழைக்கொண்டவன், அமரர்களின் தலைவன், நம் தலைவன், எம்பெருமான், அத்தகைய பெருமானை, வளம் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட, குளிர்ந்த, வளம் பெருகிய குருகூர்ச் சடகோபன் ஆயிரம் பாடல்களிலே பாடினார், அவற்றில் இந்தப் பத்து பாடல்களையும் பக்தர்கள் பாடினால், அவர்களுடைய அரிய வினைகள் பொடிப்பொடியாகி அழியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.