

பாடல் - 5
கைதவம், செம்மை, கருமை, வெளுமையுமாய்
மெய், பொய், இளமை, முதுமை, புதுமை, பழமையுமாய்ச்
செய்த திண்மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பெய்த காவு கண்டீர் பெரும் தே உடை மூ உலகே.
வலிமையான மதில் சுவரால் சூழப்பட்ட திருவிண்ணகரில் எழுந்தருளியிருக்கும் பெருமான், வஞ்சனை, நேர்மை, கருமை, வெளுமை, உண்மை, பொய், இளமை, முதுமை, புதுமை, பழமை ஆகியவற்றைச் சேர்த்துச் செய்த சோலைதான் இந்த மூன்று உலகங்களும். பெரிய தெய்வங்களைக்கொண்ட இந்த உலகங்கள், அவனுடைய படைப்பு.
***
பாடல் - 6
மூ உலகங்களுமாய், அல்லனாய், உகப்பாய், முனிவாய்,
பூவில் வாழ் மகளாய், தவ்வையாய், புகழாய், பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரம்சுடரே.
மூன்று உலகங்களும் அவனே, அவை அல்லாத பரமபதமாக இருப்பவனும் அவனே, மகிழ்ச்சி, கோபம் இரண்டும் அவனே, பூவில் வாழும் திருமகள் (ஶ்ரீதேவி), மூதேவி இரண்டும் அவனே, புகழும் அவனே, பழியும் அவனே, தேவர்கள் வந்து தொழுகின்ற திருவிண்ணகரிலே எழுந்தருளியிருக்கும் அத்தகைய எம்பெருமான், பாவியாகிய என்னுடைய மனத்திலும் உறைகிற பரம்சுடராகத் திகழ்கிறான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.