எட்டாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

காக்கும் அரசர்கள்
எட்டாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 9, 10
Updated on
1 min read

பாடல் 9

வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரும் யவரும்
வயிற்றில் கொண்டு நின்று ஒரு மூ உலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்றவண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்னவைத்தேன் மதியாலே.

தாய் தன் குழந்தையை வயிற்றில் வைத்துக் காப்பதுபோலத் தன் நாட்டு மக்களைக் காக்கும் அரசர்கள், அவர்களுக்கும் மேலான தேவர்கள் ஆகியோரைத் தன்னிடத்தில் கொண்டு நிற்பவர், பிரளயத்தின்போது மூன்று உலகங்களையும் தன் வயிற்றிலே கொண்டு நின்றவர், அத்தகைய எம்பெருமானை, திருமாலை, அவர் தந்த அறிவாலே நான் எனக்குள் நிலைக்கச்செய்தேன்.


பாடல் 10

வைத்தேன் மதியால் எனது உள்ளத்து அகத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மொய்த்து ஏய் திரைமோது தண் பாற் கடலுளால்
பைத்து ஏய் சுடர்ப்பாம்பு அணை நம் பரனையே.

அலைகள் நெருங்கி மோதுகிற குளிர்ந்த பாற்கடலிலே, படத்தையுடைய சுடர் வீசும் பாம்பாகிய ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்ட நம் பெருமானை அறிந்தேன், அவரை என் மனத்தினுள் வைத்தேன், இனி என்றைக்கும் எப்போதும் அவரைப் பிரிந்து தளர்ந்துபோகமாட்டேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com