எட்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 11

நாயகன் எம்பெருமான்
எட்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 11
Updated on
1 min read


பாடல் 11


நேர்பட்ட நிறை மூ உலகுக்கும்
நாயகன் தன் அடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர்
தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ்மாலை ஆயிரத்துள்
இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு
அடிமை செய்யவே.

நிறைந்த மூன்று உலகங்களுக்கும் வாய்த்த நாயகன் எம்பெருமான், அவனுடைய அடிமையாகும் தகுதியைக்கொண்ட தொண்டர்களுடைய தொண்டர்களுடைய தொண்டர்களுடைய தொண்டன் சடகோபன். அந்தச் சடகோபன் சொன்ன தமிழ்மாலை ஆயிரத்திலே இந்தப் பத்து பாடல்களையும் யார் பயில்கிறார்களோ, அவர்கள் நெடுமாலுக்கு அடிமையாகும் சிறப்பைப் பெறுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com