

பாடல் - 4
பேசுமின் கூசம் இன்றி, பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவிப்
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே.
பெரிய நீர்ப்பரப்பையுடைய கடலாலே சூழப்பட்ட திருத்தலம், நறுமணம் கமழும் சோலைகள், வயல்களை அழகாகக் கொண்ட திருவனந்தபுரத்தை விரும்பி உறைகின்ற பெருமான், அவரை முறைப்படி மலர்கள் தூவிப் பூசை செய்கிறவர்கள் புண்ணியம் செய்தவர்களாவார்கள். அவர்களுடைய அந்தப் புண்ணியத்தைப்பற்றி நீங்களும் கூச்சமின்றிப் பேசுங்கள், பெருமானை வணங்குங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.