

பாடல் 2
பெருமையனே வானத்து இமையோர்க்கும், காண்டற்கு
அருமையனே ஆகத்து அணையாதார்க்கு, என்றும்
திரு மெய் உறைகின்ற செங்கண்மால், நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே.
வானத்திலிருக்கும் தேவர்களைவிடப் பெருமையுடையவன், மனத்தினாலே நினைக்காதவர்களால் காண இயலாத அருமையுடையவன், திருமகளை என்றைக்கும் மார்பிலே கொண்ட பெருமான், சிறந்த கண்களையுடைய திருமால், எம்பெருமான், ஒவ்வொரு நாளும் இருவினைகளையும் நீக்கி அவன் என்னை ஆள்கின்றான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.