

பாடல் 3
ஆள்கின்றான் ஆழியான், ஆரால் குறை உடையம்?
மீள்கின்றது இல்லை, பிறவித் துயர் கடிந்தோம்,
வாள், கெண்டை ஒண் கண் மடப்பின்னைதன் கேள்வன்
தாள் கண்டுகொண்டு என் தலைமேல் புனைந்தேனே.
சக்ராயுதத்தை ஏந்தியுள்ள எம்பெருமான் நம்மை ஆள்கின்றான். இனி யாரால் நமக்குக் குறை ஏற்படும்? (யாராலும் இல்லை.) இனி இன்னொரு பிறப்பு நமக்கில்லை, பிறவித்துயரத்தை நாம் கடந்துவிட்டோம், ஒளி நிறைந்த, கெண்டையைப்போன்ற அழகிய கண்களையுடைய, மடப்பம் என்னும் குணம் நிறைந்த நப்பின்னையின் கணவன், எம்பெருமான் திருவடிகளைக் கண்டுகொண்டேன், என் தலைமேல் அவற்றைச் சூடிக்கொண்டேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.