

பாடல் 7
பணி நெஞ்சே, நாளும் பரம பரம்பரனை,
பிணி ஒன்றும் சாரா, பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி, மதுசூதன், என் அம்மான்,
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே.
நீலமணிபோன்ற சுடர்வீசும் எம்பெருமான், மதுசூதனன், என் அம்மான், அழகிய, சிவந்த பொன் போன்ற, போர் ஆற்றல் மிகுந்த சக்ராயுதத்தை ஏந்திய பெருமானை வணங்கினால் நோய்கள் வாராது, பிறவித்துயரத்தைக் கெடுத்து அருள்வான் அவன், ஆகவே, நெஞ்சே, உயர்ந்த பரம்பரனாகிய எம்பெருமானைத் தினந்தோறும் பணிவாயாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.