பத்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 10

புது மலர்கள்
பத்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 10
Updated on
1 min read

பாடல் 10

வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால், விளக்கால், புது மலரால், நீரால்,
திகைதோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே.

தினந்தோறும் எல்லாத் திசைகளிலிருந்தும் அமரர்கள் வருகிறார்கள், நறுமணப்புகை, திருவிளக்கு, புது மலர்கள், புனிதமான நீர் போன்ற பொருட்களைக் கொண்டுவந்து வணங்கி, இறைஞ்சி நிற்கிறார்கள், முறைப்படி மனம் ஒன்றி மாதவனைத் தினமும் வழிபடுகிறார்கள், அத்தகைய எம்பெருமானின் திருவடிகள், அவருடைய அடியவர்களுக்கு ஒரு பற்றுக்கோடாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com