பத்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 11

பரம்பொருளாகிய எம்பெருமானை
பத்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 11
Updated on
1 min read

பாடல் 11

பற்று என்று பற்றிப் பரம பரம்பரனை,
மல் திண் தோள் மாலை, வழுதி வளநாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்று ஆகும் கண்ணன் கழல் இணையே.

உயர்ந்தவற்றுள் மிக உயர்ந்த பரம்பொருளாகிய எம்பெருமானை, மிடுக்கான, திண்மையான திருத்தோள்களையுடைய திருமாலைப் பற்றாகப் பற்றினார் வழுதி வளநாடன், எம்பெருமானைப் போற்றி ஓர் ஆயிரம் அந்தாதிப் பாடல்களைச் சொல் மாலையாகத் தொடுத்தார். அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் கற்றவர்களுக்கு அந்தக் கண்ணனின் கழலணிந்த திருவடிகளே பற்றுக்கோடாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com