ஏழாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 11

அறிய இயலாது
ஏழாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 11
Updated on
1 min read


பாடல் - 11

ஆம்வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம்வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம்வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஆம்வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.

இப்பெருமான் இப்படிப்பட்டவன் என்று யாராலும் முழுமையாக அறிய இயலாது, அந்த அளவுக்கு அரியவன் அந்த அரி, அப்பெருமானின் இந்தத் தன்மையை அறிந்த குருகூர்ச் சடகோபன், அவனுக்கேற்ற வண்ண ஓசையாலே ஆயிரம் திருப்பாடல்களை அழகிய தமிழிலே பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் தங்களால் இயன்ற அளவுக்குச் சொல்பவர்கள் என்றைக்கும் எம்பெருமானின் அனுபவத்தைப் பெற்று மகிழ்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com