

பாடல் - 11
முகில்வண்ணன் அடியை அடைந்து, அருள் சூடி,
உய்ந்தவன், மொய்புனல் பொருநல்
துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன், வண் பொழில்சூழ்
வண் குருகூர்ச் சடகோபன்
முகில்வண்ணன் அடிமேல் சொன்ன சொல்மாலை
ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில்வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.
முகில்வண்ணனான எம்பெருமானின் திருவடிகளை அடைந்து, அவருடைய அருளைச் சூடிக்கொண்டு உய்ந்தவர், ஆடையைப்போன்ற வண்ணத்துடன் தூய்மையான நீர் மிகுதியாகப் பாய்கிற தாமிரபரணிக் கரையிலிருக்கிற, வளமான பொழில்களால் சூழப்பட்ட வளமான திருக்குருகூர்ச் சடகோபன், அவர்
முகில்வண்ணனின் திருவடிகளைப் போற்றிச் சொன்ன ஆயிரம் திருப்பாடல்கள் ஓர் அழகிய சொல்மாலையாகும், அவற்றில் இந்தப் பத்து பாடல்களையும் சொல்லவல்லவர்கள், மேகத்தைப்போன்ற நிறத்தைக்கொண்ட பரமபதத்திலே வானோர்கள்மத்தியில் பேரின்ப வெள்ளத்தில் இருப்பார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.