ஒன்பதாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 10

நல்ல பசுக்கள்
ஒன்பதாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 10
Updated on
1 min read

பாடல் 10

மாலையும் வந்தது, மாயன் வாரான்,
மா மணி புலம்ப வல் ஏறு அணைந்த
கோலம் நல் நாகுகள் உகளுமாலோ,
கொடியன குழல்களும் குழறுமாலோ,
வால் ஒளி வளர்முல்லைக் கரு முகைகள்,
மல்லிகை அலம்பி வண்டு ஆலுமாலோ,
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ,
என்சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே?

மாலைப்பொழுது வந்தது, மாயன் கண்ணன், எம்பெருமான் வரவில்லை, கழுத்திலே கட்டிய பெரிய மணிகள் சத்தமிடும்படி வலிமையான காளைகளைச் சேர்ந்த அழகிய, நல்ல பசுக்கள் மகிழ்ச்சியாகத் திரிகின்றன, கொடிய புல்லாங்குழல்கள் இசையைப் பொழிகின்றன, வெண்மையான ஒளியையுடைய வளர்கின்ற முல்லை, கருமுகை, மல்லிகை ஆகியவற்றை மொய்த்து வண்டுகள் சத்தமெழுப்புகின்றன, கடல் வானத்தைச் சென்றடைந்து அலறுகிறது, அவனை விட்டுப் பிரிந்த நான் இங்கே எதைச்சொல்லி உயிர்பிழைப்பேன்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com