ஒன்பதாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 11

இறைவனின் தொண்டர்களே
ஒன்பதாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 11
Updated on
1 min read

பாடல் 11

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா
அணி இழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனி உண்டு உமிழ்ந்தவன்மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்,
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே.

எம்பெருமானை விட்டுப் பிரிந்து உயிர்வாழ இயலாத, அழகிய நகைகளை அணிந்த ஆய்ச்சியர்கள், மாலைநேரத்தில் அப்பெருமானை எண்ணி இரங்கிப் பாடுகிறார்கள், எம்பெருமானைப் பிரிந்து அவர்கள் அனுபவிக்கும் துயரத்தை உணர்ந்த, அழகிய குருகூர்ச் சடகோபன் மாறன், உலகை உண்டு, உமிழ்ந்த அப்பெருமான்மீது ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார். இறைவனின் தொண்டர்களே, மாறன் பாடியவற்றில் இந்தப் பத்து பாடல்களையும் உலகிலே சொல்லுங்கள், அவர் சொன்ன அந்தத் திருமாலை நெருங்கித் தொழுது வணங்கி உய்யுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com