ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1

கடல் அலைகள்
ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1
Updated on
1 min read


பாடல் - 1

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை, மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே.

கடல் அலைகள் வந்து மோதுகின்ற மதிள் சுவரால் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான், தண்ணீரிலே ஆலிலையில் பள்ளிகொண்டவன், அவனுடைய திருவடிகளைத் தொழுங்கள், காலையும் மாலையும் தாமரை மலர்களைக்கொண்டு வழிபடுங்கள், அந்தத் திருமாலை அணுகி வணங்கி உங்கள் வினைகளைப் போக்கிக்கொள்ளுங்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com