ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 5

வைகுந்தத்தை அருள்கிறார்
ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 5
Updated on
1 min read

பாடல் - 5

சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்,
அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்
தரணிஆளன் தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே.

அன்பர்களுக்குப் புகலிடம் எம்பெருமானின் திருவடிகள், அந்தத் திருவடிகளை வந்தடைந்த எல்லாருக்கும், உலக வாழ்வுக்குப்பிறகு வைகுந்தத்தை அருள்கிறார் அவர், பாதுகாப்பாக அமைந்த மதிள் சுவரால் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், இவ்வுலகத்தை ஆள்கிறார், தன் அன்பர்கள்மீது அன்பு செலுத்துகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com