ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 9

நோய்கள் தீரும்
ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 9
Updated on
1 min read


பாடல் - 9

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி,
ஏதம் சாரா, எனக்கேல் இனி என் குறை?
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே.

எம்பெருமானின் திருவடிகளை ஒவ்வொரு நாளும் வணங்கினால் நோய்கள் தீரும், பாவங்கள் நெருங்காது, இனி எனக்கு என்ன குறை? (ஏதுமில்லை.) வேதங்களை ஓதுகின்றோர் விரும்புகின்ற திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கும் ஆதிப் பெருமான், அவரை அடைந்தவர்களுக்கு அல்லல்கள் ஏதும் இல்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com