ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11

தமிழ்த் திருப்பாடல்கள்
ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11
Updated on
1 min read


பாடல் - 11

பாடு சாரா வினை, பற்று அற வேண்டுவீர்,
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடல் ஆன தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே.

பற்றுகள் அறவேண்டும் என்று விரும்புகிறவர்களே, மாடங்கள் நீண்டு விளங்கும் குருகூர்ச் சடகோபர் சொன்ன தமிழ்த் திருப்பாடல்கள் ஆயிரத்திலே இந்தப் பத்தையும் பாடி, ஆடுங்கள், எம்பெருமானின் திருவடிகளை வணங்குங்கள், வினைகள் உங்களை நெருங்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com