

பாடல் 2
இலம் கதி மற்று ஒன்று எம்மைக்கும், ஈன் தண் துழாயின்
அலங்கல் அம் கண்ணி, ஆயிரம் பேர் உடை அம்மான்
நலம்கொள் நான்மறை வாணர்கள் வாழ் திருமோகூர்
நலம் கழலவன் அடிநிழல் தடம் அன்றி யாமே.
குளிர்ச்சியைத் தருகிற துழாய்த் திருமாலையை அணிந்தவர், ஆயிரம் திருப்பெயர்களை உடைய அம்மான், நலன் நிறைந்த நான்கு வேதங்களை ஓதுகிற வாணர்கள் வாழும் திருமோகூரிலே எழுந்தருளிய திருவடிகளைக் கொண்டவர், எம்பெருமான், அவருடைய திருவடி நிழலே எங்களுக்குப் பொய்கைபோன்றது, வேறு கதி எங்களுக்கு இல்லை, இந்தப் பிறவியிலும், எல்லாப் பிறவிகளிலும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.