

பாடல் 5
தொண்டீர், வம்மின், நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்,
அண்டம், மூ உலகு அளந்தவன் அணி திருமோகூர்
எண் திசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளையக்
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே.
தொண்டர்களே, நம்முடைய பெருமான், சுடரொளியாகத் திகழும் இணையற்ற தனி முதல்வன், அண்டங்களையும் மூன்று உலகங்களையும் அளந்தவன் எழுந்தருளியிருக்கும் அழகிய திருமோகூருக்குச் செல்வோம், எட்டுத் திசைகளிலும் கரும்போடு பெரிய செந்நெல் செழித்து விளைகின்ற சூழலில் அமைந்த எம்பெருமான் திருக்கோயிலைச் சுற்றிவந்து கூத்தாடுவோம், வாருங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.