பத்தாம் பத்து முதல் திருவாய்மொழி  - பாடல் 7

அனைத்துத் தேவர்களையும்
பத்தாம் பத்து முதல் திருவாய்மொழி  - பாடல் 7
Updated on
1 min read

பாடல் 7

மற்று இலம் அரண், வான் பெரும் பாழ் தனி முதலாச்
சுற்றும் நீர் படைத்து அதன்வழித் தொல்முனி முதலா
முற்றும் தேவரோடு உலகுசெய்வான் திருமோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே.

உயர்ந்த, பெரிய, ஒப்பற்ற மூலப்பிரதியைக் கொண்டு, அதன்வழியே சுற்றிலும் தண்ணீரை உருவாக்கி, தொன்மையான முனிவனாகிய பிரம்மன் தொடங்கி அனைத்துத் தேவர்களையும் உலகங்களையும் உண்டாக்கியவன் எம்பெருமான், அத்தகைய பெருமான் எழுந்தருளியிருக்கும் திருமோகூரைச் சுற்றி நாம் வலம் வருவோம், உடனே நம் துயர்கள் கெடும், அவனே நம்முடைய காப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com