பத்தாம் பத்து முதல் திருவாய்மொழி  - பாடல் 8

திருமோகூருக்கு வாருங்கள்
பத்தாம் பத்து முதல் திருவாய்மொழி  - பாடல் 8
Updated on
1 min read


பாடல் 8

துயர் கெடும் கடிது, அடைந்து வந்து அடியவர், தொழுமின்,
உயர்கொள் சோலை ஒண் தடம் அணி ஒளித் திருமோகூர்,
பெயர்கள் ஆயிரம் உடைய, வல் அரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே.

அடியவர்களே, உயர்ந்த சோலைகள், ஒளி மிகுந்த தடாகங்கள் அழகாக நிறைந்திருக்கும் ஒளி நிறைந்த திருமோகூருக்கு வாருங்கள், ஆயிரம் திருப்பெயர்களை உடையவன், வன்மையான அரக்கர்கள் அழியவேண்டும் என்பதற்காகத் தயரதன் பெற்ற திருப்பிள்ளை (ராமன்), மரகத, மணித் தடாகம்போன்ற எம்பெருமானைத் தொழுங்கள், உங்கள் துயர்கள் உடனே கெடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com