

பாடல் 10
நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர்
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சிச் சென்று அடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின், ஏத்துமின் நமர்காள்.
நம்மவர்களே, நல்ல அமரர்களுக்கு வலிமையான அசுரர்கள் தீமை செய்கிறபோது, அந்த அமரர்கள் அச்சம் கொள்வார்கள், ‘நமக்குக் காப்பு எம்பெருமான்தான்’ என்று திருமாலைச் சென்று வணங்குவார்கள், அவர் உடனே எழுவார், தனக்கு விருப்பமான உருவத்தை எடுத்துச்சென்று அவர்களைக் காப்பார், அத்தகைய பெருமான் எழுந்தருளியிருக்கும் திருமோகூரின் திருப்பெயரைப் பாடுங்கள், நினையுங்கள், போற்றுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.