

பாடல் 11
ஏத்துமின் நமர்காள் என்று தான் குடம் ஆடு
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த ஆயிரத்துள் இவை வண் திருமோகூர்க்கு
ஈத்து பத்து, இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே.
குடக்கூத்து ஆடிய கூத்தனைப் போற்றுங்கள் என்று நம்மவர்களுக்குச் சொல்லிக் குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களைப் பணிவோடு சமர்ப்பித்தார், அவற்றில் இந்தப் பத்து பாடல்களும் வளம் மிகுந்த திருமோகூர்மீது பாடப்பட்டவை, இவற்றை யார் பாடுகிறார்களோ, அவர்களுடைய இடர் கெடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.