ஒன்பதாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 7

புகழை உடையவர்
ஒன்பதாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 7
Updated on
1 min read

பாடல் 7

சுடர்வளையும் கலையும் கொண்ட அருவினையேன் தோள் துறந்த
படர்புகழான் திருமூழிக்களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவளவாயனைக் கண்டு ஒருநாள் ஓர் தூய் மாற்றம்
படர் பொழில்வாய்க் குருகு இனங்காள், எனக்கு ஒன்று பணியீரே.

பரந்த பொழிலிலே வாழும் குருகினங்களே, அரிய தீவினைகளைச் செய்தவளாகிய என்னுடைய சுடர்வீசும் வளையலையும் ஆடைகளையும் பறித்துக்கொண்டு, என் தோள்களைவிட்டு நீங்கிவிட்டார் எம்பெருமான், படர்ந்துசெல்லும் புகழை உடையவர், திருமூழிக்களத்திலே எழுந்தருளியிருக்கும் தாமரைபோன்ற திருக்கண்களை உடைய, சுடர்வீசும் பவளம்போன்ற திருவாயை உடைய அப்பெருமானை எனக்காக ஒருமுறை சென்று காண்பீர்களா? அவரிடமிருந்து ஒரு நல்ல சொல்லைப் பெற்றுக்கொண்டு வந்து எனக்குச் சொல்லுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com