

பாடல் 1
அறுக்கும் வினை ஆயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
குறுக்கும்வகை உண்டுகொலோ கொடியேற்கே.
உள்ளத்திலே எம்பெருமானை நிறுத்தி மனத்தை ஒருமிக்கச்செய்து அவனையே சிந்திப்பவர்களுடைய வினைகளை அறுக்கும் திருத்தலம், நறுமணம் மிக்க, குளிர்ந்த மலர்ச்சோலைகளால் சூழப்பட்ட திருநாவாய். கொடியவனான எனக்கு அங்கே செல்லும் பாக்கியம் கிடைக்குமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.