ஒன்பதாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 5

திருமகளுக்கும் நிலமகளுக்கும்
ஒன்பதாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 5
Updated on
1 min read

பாடல் 5

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்,
கண்ணாளன் உலகத்து உயிர், தேவர்கட்கு எல்லாம்,
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்றுகொல் கண்டே.

தாமரை மலரிலே எழுந்தருளியிருக்கும் திருமகளுக்கும், மண்மடந்தையான நிலமகளுக்கும் மணாளன், உலகத்து உயிர்கள், தேவர்களுக்கெல்லாம் கண் போன்றவன், பரமபதத்திலே எழுந்தருளியிருக்கும் விண்ணாளன், எம்பெருமான் விரும்பி உறைகிற திருத்தலம் திருநாவாய். அத்திருத்தலத்தை நான் கண்ணாரக் கண்டு களிப்பது என்றைக்கோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com