ஒன்பதாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 9

தேவர்கள், முனிவர்களால்
ஒன்பதாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 9
Updated on
1 min read

பாடல் 9

தேவர், முனிவர்க்கு என்றும் காண்டற்கு அரியன்,
மூவர் முதல்வன், ஒரு மூ உலகு ஆளி,
தேவன் விரும்பி உறையும் திருநாவாய்
யாவர் அணுகப்பெறுவர் இனி அந்தோ.

தேவர்கள், முனிவர்களால் என்றைக்கும் காண இயலாதபடி அரியவன், பிரமன், சிவன், இந்திரன் என்ற மூவரின் முதல்வன், மூன்று உலகங்களை ஆள்பவன், தேவன், எம்பெருமான், அவன் விரும்பி எழுந்தருளியிருக்கும் திருநாவாய்க்குச் செல்லப்போகிறவர்கள் யாரோ, அடடா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com