ஒன்பதாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 4

மென்மையான மலர்கள்
ஒன்பதாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 4
Updated on
1 min read

பாடல் 4

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ,
வாடை, தண் வாடை, வெவ்வாடை ஆலோ,
மேவு தண் மதியம், வெம் மதியம் ஆலோ,
மென்மலர்ப் பள்ளி வெம் பள்ளி ஆலோ,
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு
துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ,
ஆவியின் பரம் அல்ல வகைகள் ஆலோ,
யாம் உடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ.

எம்பெருமானின் நினைவுகள், பாவியாகிய என் மனத்தில் நின்று அறுக்கின்றன, குளிர்ந்த வாடைக்காற்று வெம்மையான வாடைக்காற்றாக வருத்துகிறது, விரும்பத்தக்க, குளிர்ந்த நிலவு, வெம்மையான நிலவாக ஆகிறது, மென்மையான மலர்கள் தூவப்பட்ட படுக்கை, வெம்மையான படுக்கையாக ஆகிறது, சிறகுகளையுடைய அழகிய பறவையான கருடனை வாகனமாகக் கொண்ட எம்பெருமான் என்கிற வண்டு, அழகிய பூவாகிய என் பெண்மையை நுகர்ந்துவிட்டுப் பிரிந்துசென்றுவிட்டது, இதை என் உயிரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை, என்னுடைய நெஞ்சமும் எனக்குத் துணையாக நிற்கவில்லை, (என்னைப் பிரிந்து எம்பெருமானிடம் சென்றுவிட்டது.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com