

பாடல் - 1
ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்,
கார் ஆயின காள நல் மேனியினன்,
நாராயணன், நங்கள் பிரான் அவனே.
ஒரு திருப்பெயராலே ஆயிரம் முகங்களாகி ஏழு உலகங்களையும் காக்கும் கருணையுள்ளவன், அத்தகைய ஆயிரம் திருப்பெயர்களைக் கொண்ட பெருமையுள்ளவன், கருத்த மேகம் போன்ற அழகிய, நல்ல திருமேனியைக் கொண்டவன், நாராயணன், நம் பிரான் அவனே.
பாடல் - 2
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்,
அவனே அஃது உண்டு, உமிழ்ந்தான், அளந்தான்,
அவனே அவனும் அவனும் அவனும்
அவனே மற்று எல்லாமும், அறிந்தனமே.
அகன்ற உலகத்தையெல்லாம் படைத்தவன் அவனே, இடந்து எடுத்தவன் அவனே, அதனை உண்டு, உமிழ்ந்தவன் அவனே, அளந்தவன் அவனே, பிரமன், சிவன், இந்திரன் யாவும் அவனே, மற்று எல்லாம் அவனே, இதை நாம் அறிந்தோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.