ஒன்பதாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 5, 6

தலைவன், பெரியவன்
ஒன்பதாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 5, 6
Updated on
1 min read

பாடல் - 5

அரி ஆய அம்மானை, அமரர்பிரானை,
பெரியனை, பிரமனை முன்படைத்தானை,
வரி வாள் அரவின் அணைப் பள்ளிகொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே.

அரி ஆகிய அம்மான், அமரர்களின் தலைவன், பெரியவன், முன்பு பிரமனைப் படைத்தவன், வரிகளை உடைய, ஒளி மிகுந்த பாம்பாகிய ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்டு பள்ளிகொள்கின்ற கரிய பெருமான், அவனுடைய திருவடிகளைக் காணவே என் நெஞ்சம் விரும்பும்.

பாடல் - 6

கருத்தே, உன்னைக் காணக் கருதி என் நெஞ்சத்(து)
இருத்தாக இருத்தினேன், தேவர்கட்கு எல்லாம்
விருத்தா, விளங்கும் சுடர் சோதி உயரத்(து)
ஒருத்தா, உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே.

என் கருத்தாகத் திகழும் பெருமானே, உன்னைக் காண நான் விரும்பினேன், அதற்காக என்னுடைய நெஞ்சத்திலே நீ தங்குமாறு இருத்தினேன், தேவர்களுக்கெல்லாம் தலைவனே, சுடர் சோதி திகழ்கின்ற உயரத்திலே (பரமபதத்திலே) வீற்றிருக்கும் இணையற்றவனே, என் மனம் மகிழ்ச்சியோடு உன்னை எண்ணும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com