

பாடல் - 9
கண்டுகொண்டு, என் கண் இணை ஆரக் களித்துப்
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்மாலைகள் சொன்னேன்,
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே.
பரமபதத்திலே இருக்கிற அமரர்களின் பெருமானாகிய திருமாலின் அடியவன் நான். அவரைக் கண்டுகொண்டேன், அதனால் என்னுடைய இரு கண்களும் நன்கு களித்தன, பழைய வினைகள், பற்றுகள் முற்றிலும் அறுந்துபோயின, தொண்டர்கள் அமுதமாகப் பாடக்கூடிய சொல்மாலைகளைச் சொன்னேன்.
பாடல் - 10
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை, நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானை, குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே.
‘என்னுடைய அடியவன் இவன்’ என்று எண்ணி எனக்குப் பெரிய அருளைச் செய்யும் நெடியவன், நிறைந்த புகழையுடைய, அழகிய சிறகுகளையுடைய கருடனைக் கொடியாகக் கொண்டவன், உலகில் எந்தப் பொருளும் விடுபடாமல் அதனை அளந்த திருவடிகளை உடையவன், அவனை அடைந்து நான் உய்ந்தேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.