ஒன்பதாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

அரிய உயிர்
ஒன்பதாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4
Updated on
1 min read

பாடல் - 3

அவன்கையதே எனது ஆர் உயிர், அன்றில் பேடைகாள்,
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே?
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ?
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே?

(காதலி சொல்கிறாள்) பெண் அன்றில் பறவைகளே, என்னுடைய அரிய உயிர், எம்பெருமானின் கைவசத்தில் இருக்கிறது, நீங்களோ இங்கே கூட்டமாகச் சேர்ந்து அனுபவித்து விளையாடுகிறீர்கள், இது ஏன்? (நீங்கள் இப்படி மகிழ்ச்சியாக விளையாடுவதைக் காணும்போது, தலைவனாகிய எம்பெருமானைப் பிரிந்து வாழும் எனக்கு வருத்தம் ஏற்படுகிறது.) முற்பிறவியில் தவம் செய்யாத வினையாட்டியாகிய என்னுடைய உயிர் இனி இங்கே தங்குமோ? உங்களுடைய ஏங்கும் கூக்குரலைக் கேட்டபிறகு நான் எதைச் சொல்லிக் கொண்டு உயிர்பிழைப்பேன்?


பாடல் - 4

கூக்குரல் கேட்கும் நம் கண்ணன், மாயன் வெளிப்படான்,
மேற்கிளை கொள்ளேன்மின் நீரும் சேவலும், கோழிகாள்,
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே,
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே.

(காதலி சொல்கிறாள்) பெண் மயில்களே, நீங்களும் உங்களுடைய சேவல்களும் சேர்ந்துகொண்டு சத்தமாகக் கூவவேண்டாம், அந்தக் கூக்குரலைக் கேட்டபிறகும் நம்முடைய கண்ணன், மாயன் வெளிப்படவில்லை, என்னுடைய சொல், மனம், செயல் அனைத்தும் அவனருகிலேயே இருக்கின்றன, உடலும் உயிரும் நடுவே நின்று தத்தளிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com