ஒன்பதாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 3

என் உயிரைப்போல்
ஒன்பதாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 3
Updated on
1 min read

பாடல் - 3

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்,
சீர்மல்கு சோலைத் தென்காட்கரை என் அப்பன்,
கார்முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன்.

தன்னுடைய சிறந்த குணங்களாலே என்னை ஈர்த்து, என் நெஞ்சை வஞ்சித்து உள்ளே புகுந்தான் எம்பெருமான், என்னை நலியச்செய்தான், என் உயிரைப்போல் இருந்து என் உயிரை உண்டான், சிறந்த சோலைகள் நிறைந்த திருக்காட்கரையிலே எழுந்தருளியிருக்கும் அந்தப் பெருமான், நம் அப்பன், கார்மேகத்தைப்போன்ற வண்ணம் கொண்டவன், அவனுடைய கள்வத்தனத்தை நான் அறிந்துகொள்ளவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com