

பாடல் - 4
அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்,
வெறி கமழ் சோலைத் தென்காட்கரை என் அப்பன்,
சிறிய என் ஆருயிர் உண்ட திருவருளே.
அனைத்து உலகங்களும் எம்பெருமானுக்குள் நிற்கின்றன, தானும் முறைப்படி அவற்றுக்குள் நிற்கிறான், அத்தகைய பிரான், நறுமணம் கமழும் சோலைகள் நிறைந்த திருக்காட்கரையிலே எழுந்தருளியிருக்கும் நம் அப்பன், என்னுடைய சிறிய, அரிய உயிரை உண்டானே, அவனுடைய திருவருளை என்னால் அறிந்துகொள்ளமுடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.