பத்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 10

பூதங்கள் ஐந்து
பத்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 10
Updated on
1 min read


பாடல் 10

மங்க ஒட்டு உன் மாமாயை, திருமாலிருஞ்சோலை மேய
நங்கள் கோனே, யானே நீ ஆகி என்னை அளித்தானே,
பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்திரியம், ஐம்பூதம்
இங்கு இவ் உயிர் ஏய் பிரகிருதி, மான ஆங்கார மனங்களே.

திருமாலிருஞ்சோலையிலே எழுந்தருளியிருக்கும் எங்கள் தலைவனே, நானாக ஆகி என்னைக் காத்தவனே, கிளர்கின்ற ஐந்து புலன்கள், ஐந்து பொறிகள், கருமேந்திரியங்கள் ஐந்து, பூதங்கள் ஐந்து, இங்கே இந்த உயிரோடு கலந்த மூலப்பிரக்ருதி, மஹான், அஹங்காரம், மனம் ஆகிய உன்னுடைய பெரிய மாயையை மங்கச்செய்வாய்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com