பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 4

எம்பெருமானின் திருவருள்
பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 4
Updated on
1 min read


பாடல் 4

எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்ப
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்,
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே.

எம்பெருமானின் திருவருள் கிடைக்க அரியது; அத்தகைய திருவருள் எனக்கு எளிதாகக் கிடைத்ததை எண்ணி, பெருமானைக் கண்டு என்னுடைய கண்கள் களிக்கின்றன, சிந்தையெல்லாம் அவருடைய பெருமை நிறைகிறது, நான் மகிழ்ச்சியில் திளைக்கிறேன், கிளிகள் தாவும் சோலைகள் சூழ்ந்த திருப்பேரிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், தெளிவான, உயர்வான பரமபதத்தை எனக்குத் தருவான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com