பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 9

எனக்குள் வைக்கிறான்
பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 9
Updated on
1 min read

பாடல் 9

இன்று என்னைப் பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்,
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என்செய்வான்?
குன்று என்னத் திகழ் மாடங்கள்சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள்செய்ய உணர்த்தலுற்றேனே.

எம்பெருமான் இன்றைக்கு என்னை ஒரு பொருளாகக் கருதித் தன்னை எனக்குள் வைக்கிறான், ஆனால் அன்றைக்கு, என்னைப் பொருட்படுத்தாமல் வெளியே வைத்திருந்தான், இது ஏனோ? குன்றுகளைப்போல் திகழ்கிற மாடங்களால் சூழப்பட்ட திருப்பேர் நகரிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் இதனை விளக்கவேண்டும், எனக்கு அருள்புரியவேண்டும் என்று வேண்டுகிறேன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com