

பாடல் 11
நில்லா அல்லல் நீள்வயல்சூழ் திருப்பேர்மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே.
நல்லோர் பலர் வாழ்கிற குருகூர்ச் சடகோபன், எம்பெருமானைப்பற்றிச் சிறந்த தமிழ்ச் சொற்களாலே ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களும் துன்பம் நெருங்காத, நீண்ட வயல்கள் சூழ்ந்த திருப்பேர் நகரைப்பற்றியவை, இந்தப் பாடல்களைச் சொல்லவல்ல தொண்டர்கள், பொன்னால் சூழப்பட்ட பரமபதத்தை ஆள்வார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.