

பாடல் 2
நாரணன் தமரைக் கண்டு உகந்து நல் நீர் முகில்
பூரண பொற்குடம் பூரித்தது உயர் விண்ணில்,
நீர் அணி கடல்கள் நின்று ஆர்த்தன, நெடு வரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகரே.
நாரணன் பக்தர்களைக் கண்டு நல்ல நீர் மேகங்கள் மகிழ்ந்தன, அந்தக் காட்சி, உயர்ந்த வானத்தில் பூரணப் பொற்குடத்தை நிரப்பிவைத்ததைப்போலிருந்தது. நீரை அணிந்த கடல்கள் பக்தர்களைக் கண்டு ஆரவாரம் செய்தன, எங்கு பார்த்தாலும் பெரிய மலைகளை வரிசையான தோரணங்களாக நிறுத்திவைத்து உலக மக்கள் தொழுதார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.