பத்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 3

வாருங்கள் வாருங்கள்
பத்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 3
Updated on
1 min read


|பாடல் 3

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர், பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே,
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
‘வழி இது வைகுந்தர்க்கு’ என்று வந்து எதிரே.

அன்றைக்கு உலகத்தை அளந்த பெருமானுடைய அடியவர்களுக்குமுன்னே உலக மக்கள் வந்து நின்று தொழுதார்கள், தூபத்தை ஏந்தி, நல்ல மலர்களை மழையாகப் பொழிந்து வணங்கினார்கள், முனிவர்களும் அவர்களை எதிர்கொண்டு அழைத்தார்கள், இருபுறமும் நின்று, ‘வாருங்கள் வாருங்கள்’ என்று வரவேற்றார்கள், ‘வைகுந்தம் செல்வோருக்கான வழி இதுதான்’ என்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com