பத்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 5

மாதவனின் அடியவர்கள்
பத்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 5
Updated on
1 min read

பாடல் 5

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
‘போதுமின், எமது இடம் புகுதுக’ என்றலும்,
கீதங்கள் பாடினர் கின்னரர், கெருடர்கள்,
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே.

மாதவனின் அடியவர்கள் பரமபதத்துக்கு வந்ததும், அங்குள்ள வானவர்கள் அவர்களை வரவேற்று அழைத்தார்கள், ‘வாருங்கள், எங்கள் இடங்களுக்கு வாருங்கள்’ என்றார்கள், நல்ல வேதங்களிலே வல்லவர்கள், தாங்கள் செய்த வேள்விகளின் பலன்களை எம்பெருமான் அடியவர்களுக்குச் சமர்ப்பித்தார்கள், கின்னரர்களும் கெருடர்களும் கீதங்களைப் பாடினார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com