

பாடல் 4
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து
வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்,
மன் அஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படை தொட்டான்,
நல் நெஞ்சே, நம் பெருமான் நமக்கு அருள்தான் செய்வானே.
நல்ல நெஞ்சமே, எம்பெருமான் என்னுடைய நெஞ்சத்துக்குள் தங்கியிருக்கிறான், சிறந்த தமிழ்ப்பாடல்களைப் பாடுகிறான், (என்னைப் பாடவைப்பது அவனே. கொடிய நெஞ்சம் கொண்ட இரணியனின் மார்பைப் பிளந்த வாட்டாற்றான், இந்த உலகமே அஞ்சும்படி பாரததத்துப் பாண்டவர்களுக்காக ஆயுதம் எடுத்தவன், அத்தகைய நம்பெருமான் நமக்கு அருளே புரிவான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.