பத்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 5

இனிய கவிதை
பத்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 5
Updated on
1 min read

பாடல் 5

நண்ணா அசுரர் நலிவு எய்த, நல்ல அமரர் பொலிவு எய்த,
எண்ணாதனகள் எண்ணும் நல் முனிவர் இன்பம் தலை சிறப்ப,
பண் ஆர் பாடல், இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி,
தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே.

எம்பெருமான், பண்ணோடு அமைந்த பாடல்கள், இனிய கவிதைகளை என் உருவில் பாடிக்கொண்டான், தன்னைத் தானே பாடிக்கொண்டான். அந்தப் பாடல்களைக் கேட்டு, நற்செயல்களோடு பொருந்தாத அசுரர்கள் நலிகிறார்கள், நல்ல அமரர்கள் பொலிவடைந்து சிறக்கிறார்கள், மற்றவர்கள் எண்ணாத அளவுக்குப் பெருமானின் நற்குணங்களைச் சிந்திக்கும் நல்ல முனிவர்கள் மகிழ்கிறார்கள், அத்தகைய பெருமான் திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கிறான், அந்த அம்மானை எல்லாரும் ‘தென்னா, தென்னா’ என்று போற்றுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com