பத்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 6

மூன்று உலகங்களையும்
பத்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 6
Updated on
1 min read

பாடல் 6

திருமாலிருஞ்சோலையானே ஆகி, செழு மூ உலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து, ஊழி ஊழி தலையளிக்கும்
திருமால், என்னை ஆளும் மால், சிவனும் பிரமனும் காணாது
அரு மால் எய்தி அடி பரவ, அருளை ஈந்த அம்மானே.

எம்பெருமான் திருமாலிருஞ்சோலையிலே திகழ்கிறார், ஊழிக்காலத்தில், செழிப்பான மூன்று உலகங்களையும் தன்னுடைய ஒரு சிறந்த வயிற்றினுள்ளே வைத்துக் காக்கிறார், அவரே திருமால், என்னை ஆளும் மால். அத்தகைய திருமாலைச் சிவனும் பிரமனும் தேடினார்கள், காணாமல் திகைத்தார்கள், மிகுந்த பக்தியுடன் அவருடைய திருவடிகளைப் போற்றினார்கள். அம்மான் அவர்களுக்கு அருள்புரிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com